பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் அமைக்கப்பட்ட புதிய நூலகம் சனிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர்களையும் அவர்களுடன் இணைந்த நண்பர்களையும் உள்ளக்கிய குழுவினரின் வழிப்படுத்தலில், சமூக செயற்பாட்டாளர் சபா.தனுஜனின் ஒழுங்குபடுத்தலில், அமரர் திருமதி பரமேஸ்வரி செல்லகாந்தனின் நினைவாக இந்த நூலகம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
நூலகத்திற்குரிய தளபாடங்கள், நூல்கள் மற்றும் பொருட்கள் என்பன உள்ளடங்கலாக சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உரிய நூல்கள் மட்டுமன்றி ஆசிரியர்களுக்குரிய நூல்களும், கற்றல் கற்பித்தல் வழிகாட்டி நூல்களும் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.பாடசாலை அதிபர் தி.மோகனபாலன் தலைமையில் நடைபெற்ற நூலகத் திறப்புவிழா நிகழ்வில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.கோகுலேந்திரா உட்பட நூலக உருவாகத்தில் ஒத்துழைத்த பலரும் கலந்துகொண்டனர்.
மேற்படி குழுவினர் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையுடன் சேர்த்து இதுவரை ஆறு பாடசாலைகளுக்கு நூலகங்களை அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.