ஐந்தாண்டுகளில் ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்

363 0

201607211136295943_tamil-nadu-budget-10-lakh-houses-for-poor-in-the-next-five_SECVPFதமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
அடுத்த ஐந்தாண்டுகளில் ஏழைகளுக்காக 10 லட்சம் வீடுகள் கட்டப்படும். அடுத்த ஓராண்டில் ரூ.420 கோடியில் சூரிய சக்தி மின்சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 3.50 லட்சம் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் அடுத்த ஓராண்டில் வழங்கப்படும். அடுத்த ஓராண்டில் 5.35 லட்சம் மாணவர்களுககு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.அடுத்த ஓராண்டில் நபார்டு வங்கி உதவியுடன் சாலைப் பணிகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். காவலர்களுக்கு ரூ.422 கோடி செலவில் 2673 வீடுகள் கட்டித்தரப்படும்.

ஆறுகள் புத்துயிர் திட்டத்தின்கீழ் ரூ.24.58 கோடி நிதி ஒதுக்கி வைகை, நொய்யல் ஆறுகள் தூர்வாரி மேம்படுத்தப்படும். மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மின்சார மானியத்திற்காக 9007 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.928 கோடி நிதி ஒதுக்கப்படும்.அடுத்த ஓராண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையமாக செயல்படும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.