முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது – சங்கம்

73 0
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் டுக் கட்டணங்கள் திருத்தப்படாது என முச்சக்கரவண்டி சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.பல முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் தொழிற்சங்கங்கள் கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கான ஒழுங்குமுறை பொறிமுறையை அறிமுகப்படுத்தும் வரை முச்சக்கரவண்டி கட்டணங்களை திருத்துவதற்கு தயாராக இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர் .எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் மாதாந்த அடிப்படையில் முச்சக்கரவண்டி கட்டணத்தை மாற்றியமைப்பது நடைமுறையில் இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, திருத்தியமைக்கப்பட்ட எரிபொருள் விலை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று அறிவித்தது.