ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு !

93 0
மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பதவி காலம் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமிசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.குறித்த விசாரணை ஆணைக்குழு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி நிறுவப்பட்டது.அதன் பதவி காலம் 21ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து ஆணைக்குழுவின் பதவிகாலத்தை நீடித்து இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.