வசந்த முதலிகேவிற்கு பிணை

72 0
கறுவாத்தோட்ட பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வசந்த முதலிகேவிற்கு இன்று வெள்ளிக்கிழமை (28) கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம்  பிணை வழங்கி உத்தரவிட்டது.

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நேற்று புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முதலிகேவிற்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், கைது செய்ய  பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.