வடக்கு- கிழக்கில் கதவடைப்புக்கு அழைப்பு!

88 0

வடக்கு-கிழக்கு தழுவிய கதவடைப்புக்கு மன்னார் மாவட்ட வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று(27.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,முல்லைதீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதபுதை குழிக்கு நீதி கோரி இடம்பெற உள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி மன்னார் மாவட்டத்தின் அனைத்து தரப்பினரையும் அழைத்து நிற்கின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு 13வது திருத்தச் சட்டம் தொடர்பான, ஓ.எம்.பி மற்றும் நீதி அமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து பல விடயங்களை முன் வைத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் எந்த காரணம் கொண்டும் தமிழ் மக்களுக்கான விமோசனத்தை தரப்போவதில்லை.

13 வது திருத்தச் சட்டத்திற்கு மாறாக புதிய ஒரு திட்டம் வகுக்கப்படுவதையும் கண்டிக்கின்றோம்.

எனவே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நாளை(28) பூரண கதவடைப்பு மேற்கொள்ள வடக்கு,கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.எனவே மன்னார் மாவட்ட மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.