பிரபல ஓவியர் மாருதி காலமானார் – முதல்வர் இரங்கல்

93 0

தமிழகத்தின் பிரபல ஓவியர்களுள் ஒருவரான மாருதி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் கலை உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டையில் 1938-ம்ஆண்டு ஆக.28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் ரங்கநாதன். புதுக்கோட்டையில் 10-ம் வகுப்பு வரை படித்தார். அவரது தந்தை ஆசிரியராக இருந்ததால், வீட்டில் கிடைக்கும் சாக்பீஸை கொண்டு ரங்கநாதன் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.

பின்னர் சென்னை வந்த இவர்,1969-ம் ஆண்டில் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணியில் சேர்ந்தார். பிரபல எழுத்தாளர்களின் தொடர் கதைகளுக்கும் ஓவியம் தீட்டியுள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சுபாஷினி, சுஹாசினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இவர் திரைப்படங்களுக்கு பேனர்வரையும் வேலையையும் நாளிதழ்களில் அட்டைப்படங்கள் வரையும்வேலையையும் ஒரே நேரத்தில் செய்தார். இதனால் ‘மாருதி’ என்னும் புனைப் பெயரில் வரையத் தொடங்கினார். மேலும் உளியின்ஓசை, பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களின் ஆடை வடிவமைப்பாளராகவும் மாருதி பணியாற்றியுள்ளார்.