பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரன் நாளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது அவரின் இலங்கைக்கான முதலாவது விஜயமாக அமைந்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.