அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப்புத்தகத்தில்

67 0

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர் சபாநாயகருக்கு வழங்கியிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற புதிய ஒழுங்குப்புத்தகத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது.

அதன் பிரகாரம் குறித்த பிரேரணை எடுத்த பாராளுமன்ற அமர்வுகளின்போது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தனது அடிப்படை கடமைகளை புரக்கணித்துள்ளதால் அவரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக  மக்களுக்கு உயிர்களால் நட்டஈடு வழங்கவேண்டி ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக அவருக்கும் தொடர்ந்தும் அமைச்சரவையில்  அமைச்சராக செயற்படும் இயலுமை தொடர்பில் நம்பிக்கையில்லை என பாராளுமன்றம்  தீர்மானிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 40க்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டு சபாநாயகருக்கு கையளித்திருந்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இணைந்து கடந்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன விடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.