இந்தியா தொடர்பில் அச்சம்கொள்ளும் சரத் வீரசேகர

74 0

இந்திய நாடு இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது எனவும் அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் எனவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணத்தின்போது இலங்கையையும் இந்தியாவையும் நில ரீதியாக இணைப்பது தொடர்பான சாத்தியப்பாட்டு ஆய்வுக்கு இணக்கம் காணப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சரத் வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.

‘முன்னாள் கடற்படைத் தளபதி என்ற ரீதியிலும் மக்களின் பிரதிநிதி என்ற ரீதியிலும் இந்தக் கருத்தை அரசிடம் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தியா காலூன்றினால் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கையில் இருந்து துண்டாடப்படும். இதற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் இடமளிக்கக்கூடாது. அது தேசிய பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலானது’ என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.