கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இளம் வர்த்தகர் ஒருவர் நேற்று பிற்பகல் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கமல் எரான் ஹேரத் சந்தரத்ன என்ற வர்த்தகர், உடல் நலக்குறைவுக்காக மருந்து உட்கொண்டதாக கூறப்படும் நிலையில் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக குருந்துவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டடத்தில் இருந்து வீழ்ந்து பலத்த காயங்களுக்கு உள்ளான இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.