வீடுகளை நிர்மாணிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்திச் செல்வதாக கூறி, 34.3 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக நுகோகொடை மற்றும் மாலபே காவல்நிலையங்களில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர் கடுவளை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து போலி தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு என்பனவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.