வெட் வரி தொடர்பில் கட்சித்தலைவர்கள் இன்று கலந்துரையாடல்

428 0

1896141835Untitled-1வெட் வரி தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது வெட் வரி சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றுவதற்கான திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலம் நேற்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.

எனினும் உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை காரணமாக, நேற்று இது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதற்கிடையில் நேற்றையதினம் விளையாட்டுத்துறை சட்ட மூலத்தில் திருத்தங்களை ஏற்படுத்துவது தொடர்பான விவாதம் நேற்று இடம்பெற்றிருந்தது.