லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைக்கு சமமாக விலை நிர்ணயிக்க வேண்டும். அதற்காக லாப் காஸ் நிறுவனத்துக்கு ஒருமாத காலம் அவகாசம் வழங்கி இருப்பதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு விலைகளில் சமநிலையை பேணுவதற்கே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன் பிரகாரம் அடுத்தவாரத்துக்குள் லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 350ரூபாவினால் குறைக்கவேண்டும் என்றும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைக்கு சமமாக்குவதற்கு இரண்டு கட்டங்களின் கீழ் விலை குறைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் லாப் நிறுவனத்துக்கு தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை மற்றும் 12.5 லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலைகளுக்கிடையில் 708 ரூபா வித்தியாசம் காணப்படுகிறது. அந்தளவு தொகை வித்தியாசம் இருக்க முடியாது என்றார்.