வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் மக்களுக்கான அறிவுறுத்தல்!

64 0
ஈரப்பெரியகுளம் தீ பரவல் சம்பவத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர நேற்று (22) அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.

அதன்படி, தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பொதுமக்கள் திறந்தவெளிகளில் தீ மூட்டும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வவுனியா – ஈரப்பெரியகுளம் தும்பு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை (21) திடீர் தீ விபத்து ஏற்பட்டு, தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியிருந்தது. இதனையடுத்தே வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.