கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் எனவும், கல்வியின் தரம் மற்றும் சமத்துவத்தை உருவாக்குவதற்கான தேசிய கொள்கையை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் எனவும், நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரைத்துள்ளது.
அந்த குழு நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையை 10ஆம் வகுப்பிலும் உயர்தரப் பரீட்சையை 12ஆம் வகுப்பிலும் நடத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.