நாட்டைப் பிளவுபடுத்துவதற்காக அல்ல, ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவே நாட்டு மக்கள் பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்து, ஆணை வழங்கினர் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தம்பதெனிய தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினோம்.
இதற்காக அவர் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். நாட்டைப் பிரிப்பதற்கு அல்ல, ஒற்றையாட்சியின்கீழ் அதனை பலப்படுத்துவதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.
எனவே, மக்கள் ஆணைக்கு புறம்பான பயணத்துக்கு ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒத்துழைப்பு வழங்காது என கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.