2014இல் உக்ரைன் வான்பரப்பிற்கு மேலாக மலேசியன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமைக்கு காரணமானவர் என சர்வதேச நீதிமன்றத்தினால் குற்றம்சாட்டப்பட்ட ரஸ்யாவின் முன்னாள் இராணுவ அதிகாரி இகோர் கேர்கின் புட்டின் உக்ரைன் நடவடிக்கையை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தன்னை ரஸ்ய தேசியவாதி என அறிவித்த இகோர் கேர்கின் ரஸ்ய ஜனாதிபதியை தொடர்ச்சியாக விமர்சித்துவந்த நிலையில் தீவிரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2014 இல் உக்ரைன் வான்பரப்பில் எம்எச் 17 சுட்டுவீழ்த்தப்பட்டதில் இவருக்கும் தொடர்புள்ளது அந்த சம்பவத்தின் பின்னர் மொஸ்கோ சென்ற இவர்தலைமறைவானார்.
உக்ரைன் மீதான போரை தீவிரமாக ஆதரித்த வந்த இவர் சமீபகாலங்களில் புட்டினின் நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார் – புட்டினின் வீழ்ச்சி குறித்து கடந்தவாரம் இவர்கருத்து வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
தனது கணவனை காணவில்லை என கேர்கினின் மனைவி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
நான் வீட்டிற்கு வந்தவேளை அவரை காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை அவர் தெரிவித்துள்ளார்
இந்த தகவல் வெளியான பின்னர் கேர்கின் ரஸ்ய நீதிமன்றமொன்றில் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படும் படம் வெளியாகியுள்ளது – அவருக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இகோர் கேர்கின் யார்?
இகோர் கேர்கின் அதிகம் அறியப்படாத ஒருநபர் அவரது கடந்தகாலங்கள் குறித்து அதிக தகவல்கள் இல்லை,அவர் 1970 இல் மொஸ்கோவில் பிறந்தவர்.
செச்னியாவில் போரிட்ட ரஸ்ய சோவியத் படைகளை சேர்ந்தவரான இவருக்கு டெரிபில் என்ற பட்டப்பெயர் உள்ளது.
2001 இல் ஆறு செச்னியர்களை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது.
1992 இல் பொஸ்னிய நகரத்தில் முஸ்லீம்களை படுகொலை செய்த குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக உள்ளது.