இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சமத்துவம், நீதியை நிலைநாட்டுங்கள்: ரணிலிடம் மோடி வலியுறுத்தல்

89 0

இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் சமத்துவம், நீதியை நிலைநாட்டுவதுடன் அமைதிக்கான மீள் கட்டுமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தமிழர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று, இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் யுபிஐ முறையை பின்பற்றுவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இலங்கையில் நேரிட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமிங்க, முதல் முறையாக 2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

கடந்த ஆண்டில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும்விதமாக உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக4 பில்லியன் டாலர் (ரூ.32,800 கோடி)மதிப்பிலான நிதியுதவியை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியது. மேலும், சர்வதேச நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன்டாலர் நிவாரண தொகுப்புகளைபெறுவதற்கான உத்தரவாதத்தையும் இந்தியா அளித்தது.

இந்த சூழ்நிலையில், இந்தியா – இலங்கை இடையிலான தூதரக உறவு 75-வது ஆண்டை எட்டிய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், இலங்கை அதிபரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரணிலுக்கு மோடி வாழ்த்து: இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவருக்கும், அவரது குழுவினருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.