கல்வி அமைச்சரை சந்தித்தார் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்

94 0
ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினருமான ரியா ஸ்க்ரோடருக்கும்  (RIA SCHRÖDER)  மற்றும் கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஜேர்மன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் செயற்படும் இலங்கை ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும்  இலங்கை பாடசாலைகளில் ஜேர்மன் மொழி கற்பித்தலை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.