அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான வழக்கு விசாரணை செப்டம்பர் 20 இல்!

68 0

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஊடகத்துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் தனது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிக்கான கட்டணத்தை அரசாங்க  அச்சக கூட்டுத்தாபனத்தின் பணத்தில் செலுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பான பதில்களை சமர்ப்பிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.