திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிலவும் காணிப் பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கான மத்தியஸ்த்த சபைகள் உருவாக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 29ஆம் திகதி மாவட்ட கச்சேரிகளில் இந்த சபைகள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாவட்டங்களிலும் 47 மத்தியஸ்த்த சபை உறுப்பினர்களுக்கான நியமனங்களை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வழங்கி வைக்கவுள்ளார்.
மத்திய சபைகள் ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2 மில்லியன் ரூபாவுக்கும் குறைவான பெறுமதி கொண்ட காணிகள் தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்காக இவ்வாறான மத்தியஸ்த்த சபைகள் உருவாக்கப்படுகின்றன.
இதன் முதலாவது மத்தியஸ்த்த சபை கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.