சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினையை அரசாங்கத்தின் ஏனைய குறைகளை மூடி மறைப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொகமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு சைட்டம் பல்கலைக்கழத்தை அரச பல்கலைக்கழகமாக மாற்ற முடியும்.
அவ்வாறில்லையெனில், சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றுடன் தொடர்புபடுத்தி அதனூடாக பட்டப்படிப்பின் தரத்தை உயர்த்த முடியும்.
எனினும் அரசாங்கம் அவ்வாறான எந்தவொரு நடடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என முசமில் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் மாலபே தனியார் பல்கலைக்கழக விவகாரத்தை முன்னிலைப்படுத்துவதன் மூலம் மக்களை திசைதிருப்பிவிட்டு, அதன் மறைவில் அரசியல் அமைப்பு, அரச உடமைகள் தனியார் மயமாக்கம் போன்ற விடயங்களை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக மொகமட் முசம்மில் குற்றம் சுமத்தியுள்ளார்.