ஜப்பானியக் கடற்படையின் மிகப்பெரிய உலங்குவானூர்தி தாங்கி, போர்கப்பல் இலங்கைக்கு பயணிக்கவுள்ளது.
இசுமோ என்ற இந்தப் போர்க்கப்பல் எதிர்வரும் மே மாதம் தென் சீனக் கடல் வழியாக மூன்று மாதப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இந்து சமுத்திரத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க, இந்திய நாடுகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப் பயிற்சியில் இந்த ஜப்பானிய போர்க்கப்பல் இணைந்து கொள்ளவுள்ளது.
சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் மற்றும் இலங்கையில் இந்த கப்பல் தரிக்கவுள்ளது.
இரண்டாவது உலகப்போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜப்பானின் கடற்படை பலத்தை வெளிப்படுத்தும் முதல் பயணமாக, இசுமோவின் இந்தப் பயணம் கருதப்படுகிறது.