ஐரோப்பிய ஒன்றிய பிரித்தானிய விவாகரத்து பிரேரணைக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கீகாரம்

319 0

ஐரோப்பிய ஒன்றிய பிரித்தானிய விவாகரத்து பிரேரணைக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரபுகள் சபையில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று முதல் சட்டமாக அமுலாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான செயற்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் முன்னெடுக்க முடியும்.

முன்னர் இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், புதிய பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரித்தானிய – ஐரொப்பிய ஒன்றிய விவாகரத்துக்கான பேச்சுவார்த்தைகளை பிரதமர் தெரேசா மேய் தடையின்றி முன்னெடுக்க வழியேற்பட்டுள்ளது.