கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள, வினோத் குரியன் ஜேக்கப் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் வியாழக்கிழமை (13) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் தான் கடமையாற்றிய காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜேக்கப் பாதுகாப்பு செயலாளருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்திய பிரதி உயர்ஸ்தானிகரின் சேவையைப் பாராட்டிய ஜெனரல் குணரத்ன, அவரது பதவிக் காலத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.