குடும்பத் தகராறு காரணமாக யாழில் இளம் குடும்பப் பெண் தவறான முடிவு!

72 0
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று புதன்கிழமை (12) மாலை பதிவாகியுள்ளது.

மினேஸ் சங்கீதா (23) என்ற இளம் குடும்பப் பெண்ணே வீட்டில் உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக அரலி விதையை அரைத்துக் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.