ராஜிதவிற்கு எதிரான வழங்கில் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

81 0

ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சிய விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (13) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே மற்றும் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நில் ரவீந்திர முனசிங்க ஆகியோர் இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.