இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
மொரவெவ பிரதேச செயலக பிரிவின் கித்துலூத்து கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நான்காம் கண்டம் பகுதியில் கடந்த போயா தினத்தன்று அப்பகுதியில் உள்ள மரம் ஒன்றின் கீழ் இனம் தெரியாத நபர்களினால் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடம் இலங்கை புலனாய்வு துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு வாரத்தின் பின்னர் அப்பகுதியில் ஒரு அடி உயரமான புத்தர் சிலை ஒன்றும் வைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்களிடையே இன முரன்பாடுகள் ஏற்பட்டதையடுத்து தற்போது அவ்விரு சிலைகளும் இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் இரு இனத்தவர்களும் சுமூகமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருவருகின்ற நிலையில் இப்பகுதியில் மீண்டும் புத்தர்சிலையை வைத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.