பொலிஸாரின் அபராத விதிப்பு புத்தகத்தின் 50 பக்கங்களை காணவில்லையாம் !

78 0
ஊருபொக்க பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பொறுப்பிலிருந்த போக்குவரத்து குற்றம் தொடர்பான அபராத விதிப்பு புத்தகத்தின் 50 பக்கங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பக்கங்கள் 1 முதல் 50 வரை காணவில்லை என  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் போக்குவரத்து பிரிவு   வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.