அநுராதபுரத்திற்கும் ஓமாந்தைக்கும் இடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் மற்றும் ஓமாந்தைக்கு இடையிலான ரயில் மார்க்க பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.
இந்தியக் கடன் உதவியின் கீழ் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதற்கமைய, குறித்த வீதியின் நிலைமை தொடர்பில் இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவும் அதில் இணைந்து கொள்ள உள்ளார்.
இந்த ரயில் மார்க்க புனரமைக்கப்படுவதன் மூலம் கோட்டை – காங்கேசன்துறையில் இருந்து பல வழமையான ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் மார்க்கம் எதிர்வரும் காலங்களில் புனரமைக்கப்படவுள்ளதாகவும், அந்த காலப்பகுதியில் கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கான ரயில் சேவைகளை மீண்டும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.