இரகசியமாக வெட்டப்பட்டது ‘ஸ்ரீலங்கா லகும’

79 0
சூழல் ஆர்வலர்கள் பலர் கடுமையாக போராடி பாதுகாத்து வந்த மரமொன்றை இனந்தெரியாத நபர்கள் இரகசியமாக வெட்டி அகற்றியுள்ளனர்.

வியாங்கொடையில்  காணப்பட்ட  ‘ஸ்ரீலங்கா லகும’ என்ற  பழைமையான மரமொன்றை  இனந்தெரியாத நபர்கள் வெட்டி அகற்றியுள்ளனர்.

வியாங்கொடையின் டரல்வ பகுதியில்காணப்பட்ட இந்த மரம் 100 வருடத்திற்கு மேற்பட்டது என  அந்த பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளிற்காக குறிப்பிட்ட மரத்தை  தறிக்க முற்பட்ட போது  சூழல் ஆர்வலர்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

எனினும் லொறியில் வந்த சிலர் சிலமணிநேரத்தில் இந்த மரத்தை வெட்டியுள்ளனர்.

சீனபிரஜைகள்  மற்றும் சிங்களவர்கள் சேர்ந்து இந்த மரத்தை தறித்து அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.