சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகை நிறுத்தம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

84 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறுபான்மை மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையை கணக்கில் கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கான பல்வேறு கல்விஉதவித் தொகைகளை அளித்தது.

இந்நிலையில் பாஜக அரசு இந்தாண்டு முதல் ஒன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தியதோடு, மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஃபெலோஷிப்பையும், வெளிநாட்டில் பயிலும் சிறுபான்மை மாணவர்கள் பெறும் கடனுக்கான வட்டிக்கு அளித்து வந்தமானியத்தையும் ரத்து செய்துவிட்டது.

இது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு உடனடியாக சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.