2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின் 10 ஆவது பிரிவுக்கமைய நடு ஆண்டு நிதி நிலைப்பாடு பற்றிய அறிக்கையை நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் ஒவ்வோர் நிதியாண்டு தொடர்பிலும் இயைபான ஆண்டின் ஜீன் மாதத்தின் கடைசித் தினம் பொதுமக்களுக்கு விடுவித்தல் செய்யப்படல் வேண்டும். பின்னர், குறித்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
அதற்கமைய, 2023.06.30 வரைக்குமான நடு ஆண்டு நிதி நிலைப்பாட்டு அறிக்கை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.