பெற்றோலிய விநியோகம்: அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான வர்த்தமானி வௌியீடு

113 0
இலங்கையில் பெற்றோலிய இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, வழங்கல் , விநியோகம் போன்றவற்றுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயல்முறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சருக்கு அதிகாரமுள்ளது.நிதி மற்றும் தொழில்நுட்பத் திறன் கொண்ட நிறுவனங்கள் அமைச்சின் செயலாளரிடம் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், அவ்விண்ணப்பங்கள் குழுவொன்றினால் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், அமைச்சரால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த கட்டணத்திற்கு உட்பட்டு, 20 வருட காலப்பகுதிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.தற்போது சீனாவின் Sinopec நிறுவனமும் அமெரிக்காவின் RM Parks நிறுவனமும் நாட்டின் பெற்றோலிய சந்தைக்குள் பிரவேசிக்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் United Petroleum நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.சீனாவின் Sinopec நிறுவனம் ஏற்கனவே Sinopec Sri Lanka என்ற பெயரில் இலங்கையில் தமது நிறுவனத்தை பதிவு செய்துள்ளது.