மட்டக்களப்பு வாவியில் முதலைகள் ; மீன்பிடி பாதிப்பு

78 0

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவி பெருகிவரும் ஆற்றுவாழைத் தாவரங்களால்  அழிவடைந்து வருவதுடன் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குறித்த வாவியில் மீன்கள் பாடலிசைத்ததால் பாடும்மீன்கள் வாழும் வாவி என குறித்த வாவி சர்வதேச புகழ் பெற்றது.

குறித்த மட்டக்களப்பு வாவியில் சுமார் 15 ஆயிரம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. குறித்த ஆற்றுவாழைத் பெருக்கத்தால் மீனவர்கள் தோணிகளைத் தள்ள முடியாமலும் அவதியுறுவதாகத் தெரிவிக்கின்றனர்.

முதலை மற்றும் பாம்புகளும் அதனுள் மறைந்திருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றர்.

குறித்த வாவியினை அழித்துவரும் ஆற்றுவாழைகளை அகற்றித்தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.