முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்ட அண்ணாமலை

128 0

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- மது இல்லா தமிழகத்தை உருவாக்குவது குறித்து பாஜக ஒரு திட்டம் வகுத்துள்ளது.

இந்த திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக பாஜக துணைத்தலைவர் கரு நாகராஜன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தரவேண்டும். இம்மாதத்தில் ஒருநாள் சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.