அமெரிக்காவின் கிலெவெலாண்ட்டில் உள்ள இரவுவிடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விடுதி மூடப்படுவதற்கு முன்னர் விடுதியின் பணியாளர்கள் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
23 முதல் 38 வயதுடைய ஆண்களும் பெண்களும் காயமடைந்துள்ளனர் – ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.