இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மின்கட்டணத் திருத்தங்களை வரவேற்கின்றோம்

77 0
  இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் ஜூலை – டிசம்பர் காலப் பகுதிக்கான மின்சாரக்கட்டணத்தில் அண்மையில் செய்யப்பட்டதிருத்தங்களை கூட்டுஆடைகள் சங்கங்களின் மன்றம் வரவேற்றுள்ளது.

2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மற்றும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டணத்திருத்தங்கள் தொழிற்துறை சமர்ப்பிப்புகள் போன்றவிடயங்களை கவனத்தில் கொள்ளாமல், நெரிசல் இல்லாதநேரங்களில் தொழிற்துறை மின்சாரக்கட்டணங்களில் திருத்தங்கள்செய்யப்பட்டன.

இதனால் செயற்பாட்டுச்செலவுகள் முக்கியமாக அதிகரித்ததால், நெரிசல் இல்லாத நேரங்களில் வேலையின்மை பிரச்சினைக்கான அவதானம் காணப்பட்டது.

மேலும் இந்தகாலகட்டத்தில் ஆடைத்தொழிலின் போட்டிமற்றும் ஒட்டுமொத்த நிலைத்தன்மைக்கும்பிரச்சினையாகஅமைந்தது. 12 மாதங்களில் 400% மின்கட்டணவிகிதங்கள் அதிகரிக்கப்பட்டன.

புதியதிருத்தங்கள் ஒட்டுமொத்த தொழில்துறை மின்கட்டண விகிதங்களை சுமார் 9%குறைத்துள்ளன. இந்த நடவடிக்கையைப் பாராட்டினாலும், உலகச்சந்தையின் பாதகமான நிலைமைகளின் காரணமாக, ஆடைத்துறையின் ஏற்றுமதிசெயல்திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், அதிகதொழில்துறை மின்கட்டணக்குறைப்புகளை மின்சார ஒழுங்குமுறை நிறுவனம் பரிசீலிக்கும் என்று தொழில்துறையினர் நம்புகின்றனர்.

மே 2023 இல்ஆடைமற்றும்துணிஏற்றுமதிவருமானம் 14.55% குறைந்துள்ளதால், தொழில்துறை மின்சாரக்கட்டண விகிதங்களைக்குறைப்பதன் மூலமும் தொழிற்துறையினர் மேலும் செயல்பாட்டுச் செலவுகளைக்குறைப்பதன் மூலமும் அனுகூலங்களை அடையமுடியும்.

கடந்த ஆண்டுமுதல் மீண்டும் மீண்டும் மின்கட்டண உயர்வுகளுக்கு இடையே பாதிக்கப்பட்டபகுதியில் தொழில்துறையின் போட்டித்தன்மையை மீட்டெடுப்பதில் இதுவும் ஒருமுக்கிய அங்கமாகும்.

2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 70% எரிசக்தியை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து உற்பத்திசெய்யவேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை பூர்த்திசெய்யவேண்டும் என அந்த சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.