அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இன்று (10) பிற்பகலுக்கு முன்னர் பிரதேச செயலாளர்களிடம் சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைய உள்ள நிலையிலேயே இந்த விடயத்தை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 8 இலட்சத்து 35 ஆயிரம் மேன்முறையீடுகளும் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டுக்கான புதிய விண்ணப்பதாரர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் மீண்டும் கோரப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.