முதல்வர் ஸ்டாலின், மு.க.அழகிரி சந்திப்பு

83 0

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் 90-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

2021-ல் ஸ்டாலின் முதல்வரான நிலையில், அழகிரி அரசியலில் ஈடுபடவில்லை. பின்னர், மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றாலும், அழகிரியை சந்திக்கவில்லை. எனினும், உதயநிதி அமைச்சரானதும், மதுரையில் அழகிரியை சந்தித்தார்.

இந்நிலையில், தயாளு அம்மாளின் 90-வது பிறந்த தினம் கோபாலபுரம் இல்லத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், அழகிரி, தமிழரசு உள்ளிட்டோர் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றனர். அப்போது, முதல்வர் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.