இந்தியா எங்களை காப்பாற்றியது இரத்தக்களறியை தடுத்தது !-மகிந்த யாப்பா அபயவர்த்தன

84 0

இந்தியா எங்களை காப்பாற்றியது இரத்தக்களறியை தடுத்தது என இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடந்தவருடம் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை இலங்கையை காப்பாற்றியமைக்காகவும் இரத்தக்களறியை தவிர்த்தமைக்காகவும் இலங்கையின் நம்பகதன்மை மிக்க நண்பனான இந்தியாவிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ள இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன 1948 இல் சுதந்திரம் கிடைத்த பின்னர் இலங்கை எதிர்கொண்ட பேரழிவு மிக்க நிதி நெருக்கடியின் போது இந்தியாவைபோலவேறு எந்த நாடும் உதவியது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இந்தியாவின் ( indian-travel-congress)பிரதிநிதிகளுக்கு அளித்த விருந்துபசார நிகழ்வின் போது போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா நிதிநெருக்கடியின் போது எங்களை காப்பாற்றியது இல்லாவிட்டால் நாங்கள் இன்னுமொரு இரத்தக்களறியை சந்தித்திருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

நிதிநெருக்கடியில் சிக்குண்டிருந்த இலங்கையை காப்பாற்றியமைக்காக தனது நன்றியை தெரிவித்துள்ள அவர் இருநாடுகளிற்கும் இடையிலான கலாச்சார நாகரீக தொடர்புகளை நினைவுகூர்ந்துள்ளார்.

இலங்கையும் இந்தியாவும் ஒன்றுடன் ஒன்றுநெருக்கமாக கலாச்சார ரீதியில்  தேசிய அளவில் அரசியல்ரீதியில் பின்னிப்பிணைந்த நாடுகள் இந்தியா எப்போதும் மிகவும் நம்பகரமாக நண்பன் எனவும் தெரிவித்துள்ள அவர்இன்றும் கூட இந்தியா நாங்கள் செலுத்தவேண்டிய கடனிற்கான கால எல்லையை 12 வருடங்களாக நீடிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அறிகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒருபோதும் எதிர்பார்த்தது இல்லை  வரலாற்றில்  ஒருநாடு கூட இவ்வாறு நடந்துகொண்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை பேரழிவிற்குள்ளாக்கி கடன்நெருக்கடிக்குள் தள்ளிய  கடந்தவருட நெருக்கடியான நிலையின் போது இந்தியா உதவிக்கரம் நீட்டியதை அவர் நினைவுகூர்ந்துள்ளளார்.

கடந்தவருடம் நாங்கள் நெருக்கடியான நிலையிலிருந்தவேளை நீங்கள் இந்தியா எங்களை காப்பாற்றினீர்கள் என்பதை நான் தெரிவிக்கவேண்டும்,இந்தியா காப்பாற்றியது இல்லாவிட்டால் நாங்கள் அனைவரும் இன்னுமொரு இரத்தக்களறியை சந்திக்கவேண்டியிருக்கும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.