இலங்கைக்கு அரசியல் பாடம் எடுக்க சீனா ஆர்வம்

72 0

இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்படும் இளயவர்களுக்கு அரசியல் குறித்து பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா தீர்மானித்துள்ளது.  காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவண் விஜேவர்தனவை சந்தித்த சீன வெளிவிவகார திணைக்களத்தின் உயர் மட்ட குழுவினர் இலங்கையின் இளம் அரசியல் தலைவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சீன வெளிவிவகார  தினைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் யாவ் ஜியாங்குவோ மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஹு வெய் உட்பட 6 பேர் கொண்ட உயர் மட்ட குழுவினர் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவண் விஜேவர்தனவை கடந்த வாரம் இறுதியில் சந்தித்திருந்தனர். இதன் போது சீன வெளிவிவகார தினைக்களத்தின் மனித வள பரிமாற்ற திட்டங்கள் உட்பட  பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்துரையாடி இருந்தனர்.

அதில் முக்கியமான ஒன்றான இலங்கையின் இளம் அரசியல் செயல்பாட்டளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கான ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து சீன குழுவினர் கலந்துரையாடியுள்ளனர். மேலும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயல்பட கூடிய புதிய வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடி உள்ளனர்.

ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, செல்வம் அடைக்கலம், தயாசிறி ஜயசேகர மற்றும் மொஹமட் முசம்மில் உட்பட 12 பேர்  கொண்ட குழு சீனாவுக்கு விஜயம் செய்திருந்தது. மற்றுமொரு இளம் பாராளுமன்ற குழுவினரை எதிர்பார்த்துள்ளதாக சீன குழுவினர் தெரிவித்ததுடன், இவ்வகையான புதிய வாய்ப்புகள் குறித்து ருவண் விஜேவர்தன நன்றிகளை தெரிவித்தார்.