வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நியமனம்

84 0

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி முதல் பற்றிக் டிரஞ்சன் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த உமாமகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் செயலாளராக நியமிக்கப்படவுள்ள நிலையில், அந்த வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச்செயலாளராக பற்றிக் டிரஞ்சன் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 09.07.2023 மாவட்ட செயலகத்தில் பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.