ஜேர்மனிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த திறன்மிகுப் புலம்பெயர்வோர் தேவை

97 0

ஜேர்மனி திறமையான புலம்பெயர்ந்தோரை தீவிரமாக தேடிவருகிறது, வெறும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மட்டுமல்ல, பல்வேறு துறைகளுக்கு திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.இந்தியாவுக்கான ஜேர்மன் தூதரான Dr Philipp Ackermann, சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அப்போது அவர், ஜேர்மனிக்கு, பலதரப்பட்ட துறைகளிலும், பல்வேறு மட்டங்களிலும் திறன்மிகுப் பணியாளர்கள் தேவை என்று கூறியுள்ளார்.

ஜேர்மனி, அடுத்த 15 ஆண்டுகளில் 6 மில்லியன் திறன்மிகுப் புலம்பெயர்ந்தோரை வரவேற்க இலக்கு நிர்ணயித்துள்ளது, இந்தியாவைப் பொருத்தவரை, அது ஏற்கனவே ஆண்டுதோறும் 35,000 மாணவர்களை ஜேர்மனிக்கு அனுப்பி வருகிறது.

தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துக்கொள்ளலாம்.