சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

139 0

சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் இலங்கை மின்சாரசபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல் மின்உற்பத்தி கூட்டுத்தாபனம் என்பன ஆரம்பிக்கவுள்ள 130 மெகா வோல்ட் மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இலங்கை மின்சாரசபை, இந்தியாவின் தேசிய அனல் மின் உற்பத்தி கூட்டுத்தாபனம் , ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்பவற்றின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

முதல் கட்டமாக 50 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்துக்கான எரிசக்தி அனுமதி அடுத்த வாரம் வழங்கப்படும். பரிமாற்ற செயற்பாடுகள் மற்றும் வேலைத் திட்டத்தின் மேம்பாட்டுக்கு தேவையான நிதியை திரட்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள், பரிமாற்றம் மற்றும் கட்ட மேம்பாட்டுக்காக 200 மில்லியன் டொலர்களையும் , வேலைத் திட்ட மேம்பாட்டுக்காக 20 மில்லியன் டொலர்களையும் வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.