மாத்தறையில் இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, திக்கொடை பிரதேசத்தில் இன்று அதிகாலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அப்பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய கவிந்து பெர்னாண்டோ என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பன் ஒருவரின் வீட்டுக்கு நேற்று மாலை பேருந்தில் சென்றிருந்த குறித்த இளைஞர் இன்று அதிகாலை வீடு திரும்புவதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் தனது வீட்டுக்கு முன் வீதியில் இருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீதி விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.