இன்றைய தினம் அதிகாலை 1 மணியளவில் குறித்த மரமும், மின் கம்பமும் முறிந்து விழுந்துள்ள தாகவும், இதன்போது எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
நுவரெலியா பிரதான நகருக்கு மின் இணைப்பை வழங்கும் கம்பம் முறிந்து விழுந்துள்ளமையால் பிரதான நகருக்கான மின்சாரம் இன்று காலை முதல் துண்டிக்கப் பட்டுள்ளது. அத்துடன் மின் கம்பிகள் எல்லாம் அறுந்து வீதியில் விழுந்துள்ளன. ஏனைய சில மின்கம்பங்களும் சேதம் ஏற்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பில் இப்பகுதிக்கு பொறுப்பான மின்சார சபைக்கு உடனே அறிவித்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு முறிந்த மின்கம்பத்தை மாற்றி ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.