பெரஹரா கலாச்சாரத்திலிருந்து யானைகளை அகற்றுவதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என அஸ்கிரிய பீடத்தின் நாரம்பனவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
முத்துராஜா நன்கு பழக்கப்பட்ட கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும் யானை என அவர் தெரிவித்துள்ளார்.
இது அரசசார்பற்ற அமைப்புகளின் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என தெரிவித்துள்ள பௌத்தமதகுரு ஒவ்வொரு பெரஹரா காலத்திலும் அரசசார்பற்ற அமைப்புகள் இதனை முன்னெடுப்பது வழமை என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு கலாச்சாரம் உள்ளது சிங்கள பௌத்த கலாச்சாரத்தில் நாங்கள் யானைகளை பயன்படுத்துவது வழமை இங்கிலாந்தில் அரசகுடும்பத்தினரின் நிகழ்வுகளில் குதிரைகள் பயன்படுத்துவதை போன்றது இது என அவர் தெரிவித்துள்ளார்.
யானைகளை பராமரிப்பதற்குதொழில்சார் பயிற்சிகள் எவையும் தேவையில்லை என தெரிவித்துள்ள அவர் அவை பயிற்சியின் மூலமே பின்பற்றப்படும் விடயங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கே உரிய பெரஹரா கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக மக்கள் அரசசார்பற்ற அமைப்புகளின் கருத்துக்களை எதிர்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.