தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசத்தினை வழங்கும் வகையில் நடப்பு ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.இதனை கண்டித்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் ‘வீரத் தமிழ் மகன்’ முத்துக்குமார் நினைவேந்தல் குழுவினால் கையெழுத்துப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கையெழுத்துப் போராட்டம் கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் நடந்துள்ளது.
இந்நிகழ்வில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழீழ ஆதரவாளரும் நடிகருமான சத்தியராஜ், இந்திய கம்யூனிட்டு கட்சியை சேர்ந்த சி.மகேந்திரன், தமிழீழ ஆதரவாளர்களான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் வீரசந்தானம், மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் மைத்திரேயன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.
அத்துடன் தமிழீழ ஆதரவு இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் என பலர் கலந்துகொண்டு கையொபம் இட்டார்கள்.